அசுத்தமாக காட்சி அளிக்கும் கோவில் குளம்

கோட்டூர் அருகே கோவில் குளம் அசுத்தமாக காட்சி அளிப்பதால், குளத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்.

Update: 2022-08-31 16:42 GMT

கோட்டூர் அருகே கோவில் குளம் அசுத்தமாக காட்சி அளிப்பதால், குளத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்.

ரஜதகிரீஸ்வரர் கோவில் குளம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே திருத்தங்கூர் கிராமத்தில் ரஜதகிரீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் கடந்த 2 ஆண்டுகளாக குளத்தை பராமரிக்காததால், ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் புதர்கள் முளைத்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குளம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த குளத்தை பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குளம் பராமரிப்பின்றி அசுத்தமாக காட்சி அளிப்பதால், தண்ணீர் தேவைக்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

படித்துறை அமைக்க வேண்டும்

குளத்தில் முளைத்துள்ள புதர் செடிகள் அழுகி துர்நாற்றமும் வீசி வருகிறது. கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இந்த குளத்தை தூய்மைப்படுத்தி படித்துறை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்