ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாட்டு பாதையை மீட்டு தரக்கோரிசப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகைவிருத்தாசலத்தில் பரபரப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாட்டு பாதையை மீட்டு தரக்கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-12 18:45 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் பரவளூர் இருளர் தெருவில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் மயான பாதை கேட்டு பொதுமக்கள் போராடி வந்த நிலையில், அரசு அவர்களுக்கென மயான பாதை அமைத்து கொடுத்துள்ளது.

ஆனால் அந்த பாதையையும் தனிநபர் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். மேலும் பாதைக்கான இடத்தை வருவாய்த்துறையினர் தேர்வு செய்து கொடுத்தும், அந்த இடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட இடத்தில் சுடுகாட்டு பாதை அமைத்து தரக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன் தலைமையில் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நடுவடிக்கை எடுக்கப்படும்

இதை பார்த்த அங்கிருந்த அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதில் பகுஜன் சமாஜ் கட்சி தொகுதி தலைவர் லட்சுமணன், கொளஞ்சி, கோவிந்தராசு, முத்துலட்சுமி, ராணி, ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்