சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-01-03 16:46 GMT

திருப்பத்தூர் தாலுகா குரும்பகேரி கிராமத்தில், குருமன்ஸ் மயானத்தில் பஞ்சாயத்து மூலம் கழிவுநீர் விடுவதற்கு கால்வாய் கட்டுவதை தடுக்கவும், மயனாத்தை ஆக்கரமிப்பு செய்து குப்பைகள் கொட்டுவதை அகற்றி முள்வேலி அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் சப்- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் நாங்கள் மேற்படி முகவரியில் தலைமுறை தலைமுறையாக 75 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் பயன்படுத்தி வரும் மயானத்தை பஞ்சாயத்து மூலம் ஆக்கரமிப்பு செய்து கழிவுநீர் விடுவதற்கு கால்வாய் கட்ட பள்ளம் தோண்டி வருகிறார்கள். இங்கு கழிவுநீரை விட்டார் உடல்களை புதைக்க முடியாது. எனவே குரும்பகேரி கிராமத்தில் உள்ள குருமன்ஸ் இன மயானத்தில் கழிவுநீர் விடுவதற்கு கால்வாய் கட்டுவதை தடுத்து. பஞ்சாயத்து மூலம் ஆக்கரமிப்பு செய்துள்ளதை அகற்றி முள்வேலி அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்