குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
குன்னூரில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
குன்னூர்,
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கி வருகின்றனர். இதனால் தூய்மை பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் குன்னூர் நகராட்சி சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர்நல அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மேலும் உணவு கழிவுகள், இறைச்சி கழிவுகளை தனியாக வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தரம் பிரித்து சரியாக வழங்குபவர்களுக்கு மாதந்தோறும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.