நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏரலில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-04-15 19:00 GMT

ஏரல்:

ஏரல் ஆச்சிமா அறக்கட்டளை சார்பில் 2-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை துணை தலைவர் புஹாரி தலைமை தாங்கினார். இர்ஷாத் ஆலிம் கிராத் ஓதினார். அறக்கட்டளை தலைவர் பார்க்கர் அலி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் தையல் எந்திரம், மருத்துவ உதவி, கல்வி உதவி, மாணவர்களுக்கு பள்ளி சீருடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சி நடந்தது. ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன், துணைத்தலைவர் ஜான் ரத்தினபாண்டி, ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் தசரதபாண்டியன், துணைத் தலைவர் தர்மராஜ், ஏரல் பேரூர் கழக தி.மு.க. செயலாளர் ராயப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கந்தசாமி, இக்பால், பிஸ்மி சுல்தான், ஐக்கிய ஜமாத் தலைவர் பைசல் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் ரியாஜூதன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்