காலனி வீடுகளை பராமரிக்க நிதி ஒதுக்கீடு ஆணை
காலனி வீடுகளை பராமரிக்க நிதி ஒதுக்கீடு ஆணை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்;
காரியாபட்டி,
மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காலனி வீடுகள் மிகவும் சேதமடைந்து குடியிருக்க முடியாத நிலையில் இருந்து வந்தது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் காலனி வீடுகளை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒருவீட்டிற்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான ஆணையை பயனாளிகளிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், துணைத்தலைவர் மிக்கேலம்மாள், செயல் அலுவலர் அன்பழகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.