தூய்மை பணிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்

சுரண்டை நகராட்சி தூய்மை பணிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-07-23 18:46 GMT

சுரண்டை:

சுரண்டை நகராட்சி தூய்மை பணிக்காக 15-வது நிதி குழு மானியத்தில் 13 பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுகந்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பழனிநாடார் எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணிக்காக பேட்டரி வாகனங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் அரசு ஒப்பந்ததாரர் கரையாளனுர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்