பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மின்கட்டண உயர்வு
சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு விலைவாசி உயர்வுக்கு தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவயல் பேரூராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் கழக செயலாளர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், தேவகோட்டை நகர சபை தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் மாசான் செந்தில்நாதன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிங்கம்புணரி
இதேபோல் நாட்டரசன் கோட்டை பேரூராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் கழக செயலாளர் கண்ணப்பன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் கருணாகரன், பழனிச்சாமி, சிவாஜி, செல்வமணி, ஸ்டீபன் அருள்சாமி, சிவகங்கை நகர் செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிங்கம்புணரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் கழக செயலாளர் வாசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், திருவாசகம், கருப்பையா, ஜெகன், ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்,
திருப்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், வடிவேல் மற்றும் கரு.சிதம்பரம் போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெற்குப்பையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் கழகத் தலைவர் அடைக்கப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் குமரன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளத்தூர்
பள்ளத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் கழக செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். கோட்டை யூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் கழக செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கானாடுகாத்தானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர் கண்டனூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் கழக செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.