விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்;

Update: 2022-10-23 18:45 GMT

பாபநாசம் ஒன்றியக்குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர்க்காப்பீட்டில் தஞ்சை விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் அநீதியை கண்டித்தும், பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் பாபநாசம் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் கபூர் தலைமை தாங்கினாா். ஒன்றிய தலைவர் தங்கராசு, ஒன்றிய பொருளாளர் ஜார்ஜ் ஆகிேயாா் முன்னிலை வகித்தனர். ஆா்ப்பாட்டத்தில் பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். உர தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். வாய்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்