ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-12 18:30 GMT

கரூர் மாவட்ட ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காத்தமுத்து வரவேற்று பேசினார். பொதுக்குழு உறுப்பினர் கோபால் தொடக்க உரையாற்றினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். 70 வயதான ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். குடும்ப நல நிதியை உடனுக்குடன் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்