ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-23 19:01 GMT

கரூர் மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சடையாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கவேலு வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அளிக்கும் அதே தேதியில் இருந்து மாநில அரசும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்