ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது;
தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், போலீசார், போலீஸ் ஏட்டு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு அரசாணை எண் 844 மற்றும் 937-ஐ அனைவருக்கும் பாரபட்சமின்றி அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நாகமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாளி கோரிக்கைகளை விளக்கி பேசினார். பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.