ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-10-16 17:21 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய பெருந்துறை முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை நிலைய செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சேகர், இணை செயலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மண்டல செயலாளர் மாசிலாமணி ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். இதில் 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850-ஆக வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். மருந்துகளின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளதால் மத்திய அரசு வழங்குவது போல் மருத்துவ படிைய ரூ.1000- மாக உயர்த்தி வழங்க வேண்டும். வரும் ஆண்டுகளில் டிசம்பர் 17-ந் தேதி ஓய்வூதியர் தினமாக அரசே ஏற்று அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்