இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-18 18:45 GMT

கோத்தகிரி, 

இந்திய மாணவர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட குழு சார்பில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அனிஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் யோகராஜ், துணை செயலாளர் சச்சின், மாவட்ட துணை தலைவர்கள் வினித், பவித்ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கக் கூடாது எனவும், இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்