விவசாய சங்கத்தினர் ஆா்ப்பாட்டம்

புவனகிரியில் விவசாய சங்கத்தினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-05-17 18:45 GMT

புவனகிரி,

கீரப்பாளையம் ஒன்றியம் டி.நெடுஞ்சேரி செல்வவிநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வரும் விவசாயிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வரும் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும், கோரிக்கை மனுவை வாங்க மறுத்த அதிகாரியை கண்டித்தும் புவனகிரி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் தர்மதுரை தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் கற்பனைசெல்வம், மாவட்ட இணை செயலாளர் வாஞ்சிநாதன், ஒன்றிய தலைவர் வாசுதேவன், ஒன்றிய துணைத் தலைவர் குணசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர் சுப்ரமணியம், புவனகிரி ஒன்றிய செயலாளர் காளி கோவிந்தராசு, பொருளாளர் மகாராஜன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்