தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில், பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில், பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-27 18:45 GMT


கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் பா.ஜ.க சார்பில் தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் செல்வநாயகம், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் திருக்கோவிலூர் ஆர்.கார்த்திகேயன், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அசுவத்தாமன் கலந்துகொண்டு தமிழகத்தில் இந்தி திணிப்பு என்று பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு தமிழக மக்களை திசை திருப்பி தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் தி.மு.க அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். இதில் சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட செயலாளர் சர்தார்சிங், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் மகேந்திரன், கள்ளக்குறிச்சி ஒன்றிய தலைவர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்