கோர்ட்டு வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி கோர்ட்டு வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் வக்கீல் சங்கம் சார்பில் நடந்தது;

Update: 2023-03-29 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

தமிழகத்தில் தொடர்ந்து வக்கீல்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் முத்துக்குமார் என்ற வக்கீலும், சென்னையில் ஜெய்கணேஷ் என்ற வக்கீலும் சமீபத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதேபோல வக்கீல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி வக்கீல்கள் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த கோர்ட்டு வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஆர்.பி.அருள்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் வி.வி.செந்தில்குமார், பொருளாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்