தர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-05-20 18:45 GMT

தர்மபுரி:

மின்வாரிய ஒப்பந்தத்தில் முக்கிய கோரிக்கைகள் இடம்பெறாததை கண்டித்தும், முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்,சி.ஐ.டி.யு. மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தர்மபுரியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன், நிர்வாகிகள் சீனிவாசன், ஜெகநாதன், பொன்னுதுரை, வெண்ணிலா, பொறியாளர் சங்க மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மின்வாரியத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்களை கண்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கேங்மேன் பணியாளர்கள் மற்றும் 1-12-2019 முதல் பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கான சலுகைகள், உரிமைகளை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்