கிருஷ்ணகிரியில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-03 18:45 GMT

கிருஷ்ணகிரி:

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலையில் இருந்து புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை வரை ஊர்வலம் மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜதுரை நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், பயிர்கடன் தள்ளுபடியில் விதிமீறல் என்று பணி ஓய்வு நிதி பலன்களை நிறுத்தக்கூடாது. கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்ட பயிர்கடனுக்கு உரிய தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்ட சுயஉதவிக்குழு கடனுக்கு உரிய தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். நகைக்கடன்கள் மீது நடவடிக்கை இழப்பிற்கு பணியாளர்களை பொறுப்பாக்கக்கூடாது. எம்.எஸ்.சி., ஏ.ஐ.எப்., திட்டத்தின் கீழ் தேவையற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. அடுத்த ஊதிய ஒப்பந்தம் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். அங்காடி பணியாளர்களுக்கு அதிகாரி மற்றும் அரசியல் பிரமுகர்களால் அன்றாடம் நிகழும் அச்சுறுத்தல்களை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்