கிராம நிர்வாக அலுவலகத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2023-03-31 18:45 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தில் திருச்செங்கோடு சாலையில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை பொதுமக்கள் அங்கு கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்