வடமதுரையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

வடமதுரையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-03-28 02:15 IST

வடமதுரை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் வடமதுரை 3 சாலை சந்திப்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். நகர தலைவர் அனந்த வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜன் வரவேற்றார். இந்த

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர்கள் போஸ், பாஸ்கரன், மாவட்ட நிர்வாகி கணேஷ்கண்ணா, நகர பொருளாளர் சரவணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி, சுப்பிரமணி, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் கவுதம் ஜெயசாரதி, மாவட்ட துணைத்தலைவர் ஹரிஹரன், மகளிர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், கிராம கமிட்டி தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்