தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நல சங்க தர்மபுரி மாவட்ட தலைவர் முனியன் தலைமை தாங்கினார்.
ஓய்வூதியர் நல சங்க நிர்வாகிகள் அசோகன், மாது, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில துணைத் தலைவர் வேடியப்பன், மாநில துணைச் செயலாளர் பட்டாபிராமன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன், மாவட்ட பொருளாளர் வணங்காமுடி, தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் மணி, ஜெகநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.