நிரந்தர தொழிலாளர் கோர்ட்டு அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தர்ணா

Update: 2022-10-05 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் நிரந்தர தொழிலாளர் கோர்ட்டு அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட தலைவர் நாகராசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜீவா, மாநில குழு உறுப்பினர்கள் நாகராஜ், கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணைத்தலைவர் சிங்காரவேல் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விரைவாக தீர்வு

தர்மபுரி மாவட்டத்தில் நிரந்தர தொழிலாளர் கோர்ட்டை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் தர்மபுரியில் தொழிலாளர் துறை அலுவலகத்தை அமைக்க வேண்டும்.

தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழிலாளர் நிரந்தர வைப்பு நிதி அலுவலகம், இ.எஸ்.ஐ. அலுவலகம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்