ஓசூர்:
ஓசூர் பஸ் நிலையம் முன்பு தனியார் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்துக்கு மின்சாரம் வழங்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கக்கோரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதனை ஏற்று வணிக வளாகம் முன்பு நேற்று டிரான்ஸ்பார்மர் அமைக்க குழி தோண்டப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள் டிரான்ஸ்பார்மர் அமைக்க உள்ள இடம் குறுகிய சாலை என்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்றும், கடைகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.