அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-06-22 20:40 GMT

கும்பகோணம், ஜூன்.23-

ராணுவ ஆள் சேர்ப்பு முைறயில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. கும்பகோணம் ெரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் முன்னிலை வகித்தார். இதில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் சு.ப.தமிழழகன், காங்கிரஸ் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், நகர் தலைவர் மிர்சாவுதீன், மற்றும் பலர் கலந்்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்