அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-06-17 17:08 GMT

திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜலெட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தவமணி, மாவட்ட தலைவர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஜ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் ரா.மாலதி, சங்கதின் மாவட்ட பொருளாளர் பி.மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை கண்டித்து கோஷம் எழுப்பினா்.

Tags:    

மேலும் செய்திகள்