விழுப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update: 2022-05-28 17:32 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சாதியற்றவர் என சான்று வழங்க வேண்டும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் சங்கரன், தலித் மண்ணுரிமை கூட்டமைப்பின் நிறுவனர் நிக்கோலஸ், எஸ்.சி., எஸ்.டி. பெடரேஷன் தலைவர் தனசேகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் சவரி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

இதில் சேகர், சிவகுரு, விஸ்வநாதன், முருகன், பிரகாஷ், அறிவழகன், மேகநாதன், தமிழரசன் கண்ணதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்