தர்மபுரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-05 19:00 GMT

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தர்மபுரி மாவட்டக்குழு சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குழந்தைவேல், முருகேசன், முனியம்மாள், பெருமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் மாதையன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட துணைத்தலைவர் சுதர்சனம், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன், அகில இந்திய மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் கமலா மூர்த்தி, நிர்வாகிகள் ரவீந்திரபாரதி, முனியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்