செல்போன் செயலியில் பெண்கள் படத்தை அனுப்பி விபசாரம்
சேவூரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து செல்போன் செயலி மூலமாக பெண்களின் புகைப்படத்ைத அனுப்பி ஆண்களை வரவழைத்து விபசார தொழில் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சேவூர்
சேவூரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து செல்போன் செயலி மூலமாக பெண்களின் புகைப்படத்ைத அனுப்பி ஆண்களை வரவழைத்து விபசார தொழில் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விபசாரம்
திருப்பூர் மாவட்டம் அவினரியை அடுத்த சேவூர் அருகே கருமாபாளையம் ஊராட்சி குபேரன்நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக சேவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பவுல்ராஜ் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் சேவூர் போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர்கள் சேகர், சர்வேஸ்வரன், தனிப்பிரிவு போலீஸ் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வீட்டை கண்காணித்தனர்.
3 பேர் கைது
அப்போது அந்த வீட்டில் 3 வாலிபர்கள், ஒரு 25 வயது இளம் பெண் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் திருப்பூர் வெள்ளியம்பாளையம் அருள்ஜோதி நகரை செல்வராஜ் மகன் விக்னேசுவரன் (வயது 28), அவினாசி கைகாட்டிப்புதூர் ஜல்லிமேடு தோட்டம் வெங்கடேசுவரன் மகன் பாலமுருகன் (25), சேலம் ஓமலூர் கள்ளிக்காடு சுப்பிரமணி மகன் அருண்குமார் (33) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் விக்னேஸ்வரன், பாலமுருகன் மற்றும் அருண்குமார் ஆகியோரை கைது செய்தனர். அந்த இளம் பெண்ணை மீட்டு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பினார்கள். இந்தவழக்கில் கைதான பாலமுருகன் தையல் தொழிலாளியாகவும், அருண்குமார் செல்போன் சர்வீஸ் கடை வைத்து இருப்பதும் தெரியவந்தது.
கார் பறிமுதல்
இவர்கள் 3 பேரும் சேர்ந்து இளம் பெண்களின் படத்தை செல்போன் செயலி மூலமாக சபலம் உள்ளவர்களுக்கு அனுப்பியும், ஆசை வார்த்தைகள் கூறியும் அவர்களை வரவழைத்தும் விபசாரம் செய்துள்ளனர். மேலும் ஒரு இரவுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயம் செய்துள்ளார். இதனால் அந்த வீட்டில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் பயன்படுத்தி வந்த காரையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சேவூரில் வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து அங்கு இளம் பெண்களை வைத்து விபசாரம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.