வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-24 18:42 GMT

குளித்தலை அருகே உள்ள குப்புரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 29). இவர் சம்பவத்தன்று குப்புரெட்டிபட்டி நால்ரோடு பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேரம் போர்டு விளையாடி கொண்டிருந்தபோது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வேல்முருகன் அவரது மனைவி கீதா, சகோதரர் கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தேவேந்திரனை திட்டி தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த தேவேந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் வேல்முருகன், கீதா, கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்