இந்திய கம்யூனிஸ்டு சார்பில் பிரசார இயக்கம்
கொள்ளிடத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் பிரசார இயக்கம்
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பா.ஜனதா ஆட்சியை அகற்றுவோம் என்ற கோஷத்தை முன்வைத்து நடை பயண இயக்கம் நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் பகுதியில் பழையாறு துறைமுகத்தில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து நடை பயணத்தை தொடங்கினர். தொடர்ந்து கிராமங்கள் தோறும் நடை பயணம் மேற்கொண்டு மாற்றத்தை நோக்கி என்ற நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 150 கிராமங்களுக்கு நடைபயணமாக சென்று வந்த கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று முன்தினம் கொள்ளிடத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்த பிரசார பயணம் 12-ந் தேதி கொள்ளிடம் அருகே உள்ள புத்தூரில் சென்று முடிவடைகிறது.