இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு
இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை, ரூ20,000 லிருந்து ரூ50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!;
சென்னை,
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினை ரூ.15,000/-லிருந்து ரூ.20,000/- ஆக உயர்வு செய்தும், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தவும் இதற்கு தேவைப்படும் மொத்த செலவின தொகை ரூ.1.0000.000/- திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டது.
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிததங்களில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், 04.12.2022 அன்று சென்னை-1 மற்றும் சென்னை-2 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது என்றும், மேலும், மேற்படி 31 இணைகளையும் சேர்த்து 20 இணை ஆணையர் மண்டலங்களில் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன என்றும், இந்நிலையில் சட்டமன்ற அறிவிப்பின்படி இன்னும் 283 இணைகளுக்கு திருக்கோயில் மூலம் இலவசத் திருமணம் ஏழை எளிய வைக்கப்படவுள்ளதென்றும், திருகோயில்கள் மூலம் இலவசத் திருமணம் நடத்துவதற்காக மேலே நடத்தி முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவான ரூ.20,000/- தொகையினை ரூ.50,000/-ஆக உயர்த்தி. கீழ்க்கண்ட திட்ட விவரப்படி திருக்கோயில் நிதிமூலம் செலவினம் மேற்கொள்ள
அரசாணை பிறப்பிக்குமாறு ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்:-
திட்ட விவரம்
தொகை
எண்.
ரூ.
1. 20,000/-
2.1000/-
3.2000/-
4.2000/-
5.1000/-
திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம்
மணமகன் ஆடை
மணமகள் ஆடை
திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு
மாலை, புஷ்பம்
பீரோ-1
கட்டில்-1
மெத்தை
தலையணை-2
பாய்-1
6.7.800/-
7.7,500/-
8.2.200/-
9.190/-
10.180/-
11.1,000/-
கைக்கடிகாரம்-2
மிக்ஸி-1
12.1,490/-
13.பூஜை பொருட்கள் + பாத்திரங்கள் வகையறா
3.640/-
கூடுதல்
50,000/-
3. சமய இந்து
அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசிலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர் அதனை ஏற்று. திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட
செலவினத் தொகை இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் கிடைக்காத நிலையில் நிதிவசதிமிக்க திருக்கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவதாலும், திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20.000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.