ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தடை
ஸ்ரீ்வில்லிபுத்தூர் பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீ்வில்லிபுத்தூர் பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
அனைத்து கட்சி கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, அ.தி.முக. நகர செயலாளர் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், தி.மு.க. நகர செயலாளர் அய்யாவு பாண்டியன், பா.ஜ.க., கம்யூனிஸ்டு, அ.ம.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துணை சூப்பிரண்டு சபரிநாதன் கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடைபெற தடை விதிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டம்
பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வேளாளர் தெரு வடக்கு ராதா வீதி மட்டும் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் காமராசர் சிலை, நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம்.
வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் போன்ற இடங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.