பலத்த சூறாவளி காற்று: கீழக்கரை ஏர்வாடி பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை
கீழக்கரை ஏர்வாடி பகுதியில் பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி,வாலிநோக்கம் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக கடந்த மூன்று நாட்களுக்கு மேலாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.
காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக கீழக்கரை மற்றும் ஏர்வாடி பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டு படகுகள் வரிசையாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக மீன் பிடிக்க செல்லாததால் கரையோரத்தில் சிறிய வத்தைகளில் சென்று மீன்பிடித்து வரும் மீனவர்கள் கொண்டுவரும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.