நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-07-22 03:44 IST

பேட்டை:

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நடைமுறைப்படுத்தியுள்ள பொது பாடத்திட்டத்தினை கைவிட வலியுறுத்தி ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு 3, 4-ம் மண்டல தலைவர்கள் ஹெய்ஸ் தாசன், ஐசக் சோபன் ஆகியோர் தலைமை தாங்கினர். மூட்டா பொதுச் செயலாளர் பேராசிரியர் நாகராஜன் சிறப்புரையாற்றினார்.

மூட்டா பொருளாளர் ராஜ ஜெயசேகர், பேராசிரியர்கள் ஷைலா குமாரி, ராதாகிருஷ்ணன், சிவஞானம், ஜேம்ஸ் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர். இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பேராசிரியைகள் கலந்து கொண்டனர். 3-ம் மண்டல பொருளாளர் பேராசிரியர் கோமநாயகம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்