நாமகிரிப்பேட்டையில் முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

நாமகிரிப்பேட்டையில் முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.,;

Update: 2023-06-24 18:45 GMT

ராசிபுரம்

அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிந்து அதனை நீக்கவும், கற்பித்தல் செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் ஆசிரியர்களுக்கு தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சியை தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தின் சார்பில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் பணியில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி, மாணவர்களின் மன்ற செயல்பாடுகள், கலையரங்க செயல்பாடுகள், மாணவர்களின் உடல் நலம் குறித்த பயிற்சிகள் ஆகியவை பயிற்சி பெற்ற கருத்தாளர்களால் அளிக்கப்பட்டது. பயிற்சியில் 64 மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முஸ்தபா ஆகியோர் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு ஆசிரியர் பயிற்றுநர்கள் முருகேசன், சென்றாய பெருமாள், மகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்