150 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்

பணகுடி அருகே நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 150 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.;

Update: 2022-11-30 20:21 GMT

பணகுடி:

பணகுடி அருகே காவல்கிணற்றில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுயம்புராஜ், ஆவரைகுளம் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோசிற்றா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு, 150 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகமாக விளங்குவதற்கு கர்ப்பிணிகள் கர்ப்ப காலங்களில் அரசு வழங்கும் சத்தான இணை உணவுடன், நல்ல சத்தான உணவுகளையும் உண்ண வேண்டும். கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். அப்போதுதான் சுகப்பிரசவம் நடைபெறும் என்றார். இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன், பஞ்சாயத்து தலைவர்கள் இந்திரா சம்பு (காவல்கிணறு), முத்தரசி ரெகுபால் (தெற்கு வள்ளியூர்), அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமூகரெங்கபுரம் ஊராட்சி சிங்காரதோப்பு, முத்துநாடார் குடியிருப்பு, கட்டனேரி ஊர் பொதுமக்கள் சபாநாயகர் அப்பாவுவை அவரது இல்லத்தில் சந்தித்து தங்கள் ஊருக்கு புதிய பகுதிநேர ரேஷன் கடை கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். அப்போது ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சமூகை முரளி, சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள், துணைத்தலைவர் பேச்சியப்பன், ஒன்றிய கவுன்சிலர் இசக்கி பாபு, கட்சி நிர்வாகி தக்காளி குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்