குறு, சிறு-நடுத்தர தொழில்களுக்கான கொள்முதல் உச்சி மாநாடு: சென்னையில் இன்று நடைபெறுகிறது

கிரவுன் பிளாசா ஓட்டலில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மாநாடு நடக்கிறது.;

Update: 2022-08-26 01:54 GMT

கோப்புப்படம்   

சென்னை,

இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசு இ-சந்தை மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கொள்முதல் உச்சி மாநாடு 26-ந்தேதி (இன்று) சென்னையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்மண்டல பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. கிரவுன் பிளாசா ஓட்டலில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அரசு இ-சந்தை இணையப்பக்கத்தின் தலைமை நிர்வாகி பி.கே.சிங் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் போன்றவற்றின் கொள்முதல் தேவை என்ன என்பதை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அறிந்து கொள்ளவும் அதற்கேற்ப தொழில்களை வடிவமைக்கவும் இந்த மாநாடு உதவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்