பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2023-01-18 18:45 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை கிராமத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் கிராமத்தார்கள் சார்பில் தை மாதத்தில் பால்குடம் எடுத்து சக்திவிநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கிருங்காக்கோட்டையை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சந்திவீரன் கோவிலில் இருந்து பால் குடங்களை சுமந்து கொண்டு நான்கு ரத வீதி வழியாக ஊர்வலமாக வந்து சக்தி விநாயகர் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து சக்தி விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதையொட்டி அன்னதான விழா நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்