விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேளாண் பிரிவை சேர்ந்த உதவி பேராசிரியர்கள் ஜெயந்தி, ரபீணா ஆகியோர் தலைமையில் ராஜபாளையம் வட்டாரத்தில் ஊரக அனுபவ திட்டத்தின் கீழ் வேளாண்மை பிரிவில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் தர்ஷினி, வினுப்பிரியா, கவிபிரியா, வினிஷா, ஜான்வி ஜாக்குலின், தேவ பிரபா, திவ்யா, சக்தி உமா, கோபிகா ஆகியோர் ராஜபாளையம் வடக்கு தேவதானத்தில் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஜீவாமிர்த கரைசல் மற்றும் மீன் அமில கரைசல் ஆகியவற்றை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்தும் முறைகளையும் பற்றி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். செயற்கை ரசாயனத்தை பயிர்களுக்கு தெளிப்பதால் நிலத்திற்கும் அவற்றை உண்பதால் மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகளையும் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.