கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடந்த கட்டுரை, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் முருகேஷ் பரிசு வழங்கினார்.;

Update: 2022-10-02 18:11 GMT

உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை கல்வித்துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்களிடையே கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், நடனம் மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தியது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த கோகுல்நாத், தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த கோபிகா, திருவண்ணாமலை நகராட்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ரூபினி.

பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சென்னம்மாள், வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த விஷால், ஆவூர் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மெஹராஜ்.

ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ருக்சார், திருவண்ணாமலை நகராட்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த காவியா, ஆவூர் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த ரம்யா,.

நடனப் போட்டியில் வெற்றி பெற்ற தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அனுஷ்கா, திருவண்ணாமலை நகராட்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிரதிபா பிரகாசம், தனலட்சுமி, சியானா மற்றும் ஆவணியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த தாமரை ஆகியோருக்கு கலெக்டர் முருகேஷ் பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவி சுற்றுலா அலுவலர் அஸ்வினி, முதுநிலை தமிழ் ஆசிரியர் வேலாயுதம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்