வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு

அரசு பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-01-20 19:41 GMT

காளையார்கோவில்,

காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை தாங்கினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவி மலர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி ஆசிரியை அமலதீபா வரவேற்றார்.

விழாவையொட்டி வண்ண கோலமிட்டு பாராம்பரிய முறையில் மாணவ-மாணவிகள் புது பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பள்ளி நூலகத்திற்கு ரூ.2ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆசிரிய பயிற்றுனர் வனிதா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ஆசிரியை கமலாபாய் பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவில் சத்துணவு உதவியாளர் அஞ்சலை, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாண்டிமீனாள், ரேவதி, தூய்மை பணியாளர் அழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ராஜபாண்டி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்