தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

தடகளப்போட்டியில் வெற்றி பெற்ற தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Update: 2022-08-26 16:30 GMT

பொறையாறு;

பொறையாறு அருகே காட்டுச்சேரி சமத்துவபுரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் சீர்காழி கல்வி மாவட்ட அளவிலான குறு வட்ட தடகளப்போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தடகள போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று பொறையாறு தவசு முத்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் முதலிடம் பிடித்தனர். செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடமும், பொறையாறு சர்மிளா கார்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடமும் பிடித்தனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா தலைமை தாங்கினார். ஆறுபாதி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா, பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி வாழ்த்தி பேசினார்.நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் காட்டுச்சேரி ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி, ஆறுபாதி ஊராட்சி தலைவர் தமிழரசி மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்