கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பாவூர்சத்திரம் அருகே கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியில் மாயாண்டி கோவில் திருவிழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் வெவ்வேறு இடங்களில் கபடி போட்டி நடைபெற்றது. மேட் கபடி போட்டியில் முதல் பரிசை பூவனூர், இரண்டாம் பரிசு லக்கி ஸ்டார் அணியினரும் பெற்றனர். மற்றொரு போட்டியில் முதல் பரிசை புளியங்குடி, 2-வது பரிசை முருகன்குறிச்சி அணியினரும் பெற்றனர்.