திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-01-19 19:00 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் இல.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பெற்றோர், ஆசிரியர் கழகத்தலைவர் சதாசிவம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்