சமூக செயற்பாட்டாளர்களின் "அந்தரங்க வீடியோ எடுத்து பணம் பறிப்பு" - சிக்கிய 2 பிரபல பெண் யூடியூபர்கள்

யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள், சமூக சேவைகளில் ஈடுபட்டுவருபவர்களின் அந்தரங்களை மறைமுக கேமரா மூலம் வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்டுகிறது.

Update: 2023-02-07 08:36 GMT

சென்னை,

இன்டெர்நெட் மற்றும் சமூகவலைதளங்களின் செயல்பாடுகள் மற்றும் ஆதிக்கம் அதிகரித்துவரும் அதேவேளை சமூக வலைதளங்கள் சார்ந்த சைபர் குற்றங்களும், அதனால் பாதிப்புக்குள்ளாகி பலர் கூனிக்குறுகி தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்களும் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

அந்தவகையில் பலரும் யூடியூப் சேனல் துவங்கி ஏதேனும் ஒன்றை பதிவிட்டு விளம்பரம் தேடும் பலரும், வாசகர்களைக் கவரும்வகையில் சமையல் குறிப்பு, மருத்துவம், பயனுள்ள குறிப்புகள் போன்ற பதிவுகளைப்போட்டு லைக், கமெண்ட்டு, மற்றும் திறமைக்கு ஏற்ற வருமானமும் ஈட்டி வருகின்றனர்

இந்தநிலையில், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்த யூடியூபர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்திலிருந்து செயல்பட்டுவரும் யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள், சமூக சேவைகளில் ஈடுபட்டுவருபவர்களின் அந்தரங்களை மறைமுக கேமரா மூலம் வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்டுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த போலீசார், சென்னையை சேர்ந்த ஜெனிபர் தனம் மற்றும் மதுரையை சேர்ந்த தனலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளதும், முக்கிய குற்றவாளியான செந்தில்குமாரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்