தனியார் நிறுவன காவலாளிக்கு சரமாரி கத்திக்குத்து
விக்கிரவாண்டி அருகே தனியார் நிறுகூன காவலாளியை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்;
விக்கிரவாண்டி
காவலாளி
விக்கிரவாண்டியை அடுத்த செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 50). இவர் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு திருவண்டார் கோவிலில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் பழனிவேல் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
கத்திகுத்து
செங்கமேடு கிராமத்தில் வந்தபோது அதே பகுதியைசேர்ந்த அவரது உறவினர் சத்தியராஜ்(28) என்பவர் முன்விரோதம் காரணமாக பழனிவேலை வழிமறித்து தான் வைத்திருந்த சூரி கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயத்துடன் மயங்கிய விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறாா்கள்.
வலைவீச்சு
இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சத்தியராஜை வலை வீசி தேடி வருகிறார்கள்.