தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 8, 22-ந் தேதிகளில் நடக்கிறது
தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்பில் வருகிற 8 மற்றும் 22-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.