தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் 12-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

Update: 2023-08-09 18:25 GMT

கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் திறன் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், வட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் உள்ள பொதிகை பொறியியல் கல்லூரியில் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன.

எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் முடித்த ஆண்கள், பெண்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார்அட்டை நகலுடன் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை பெறலாம். மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் அடையுமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்