மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கடலூரில் 19-ந் தேதி நடக்கிறது
கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19-ந் தேதி நடக்கிறது.
கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துக்கொள்ள உள்ளது. இதில் படித்த வேலையில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது கல்வி தகுதிக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பினை பெற்று வழங்கிடுவதற்கும், மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் சுயதொழில் புரிய விருப்பமுள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடனும், மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடனும், ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும், இ-சேவை மையம் அமைத்திட வழிமுறையும், சுயதொழில்புரிவதற்கு தேவையான பயிற்சிகளுக்கான விவரமும் அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் மாவட்ட திட்ட அலுவலர் திரிபுரகுமார், தமிழ்நாடு உரிமைகள் திட்டம், அறை எண்.111, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கடலூர் (9043260751, 04142-284415) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.